/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்களுக்கு பாராட்டு ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்களுக்கு பாராட்டு
ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்களுக்கு பாராட்டு
ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்களுக்கு பாராட்டு
ஐஸ் ஸ்கேட்டிங் வீரர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 02, 2024 04:24 AM
சின்னாளபட்டி: அரியானா மாநிலத்தில் நடந்த தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க மாணவர்கள் கவுதம், அகிலன், சுதர்சன், ஆதவன், ரமீதா தங்கம் வென்றனர். அமிர்தவர்ஷன், ஆழின், கீர்த்திகா, ஜேசன் ஜோசப் ஆகியோர் வெள்ளி பதக்கம், கிறிஸ்டினா, ஷெரிப், பிரசன்னா, ஜீவன், கார்த்திகேயன் வெண்கல பதக்கம் பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு விழா நடந்தது.
மாஸ்டர் பிரேம்நாத் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் தங்கலட்சுமி முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர் வாழ்த்தினர்.