ADDED : ஜூன் 21, 2024 05:17 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுராமன்.
இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்துகிறார். இங்கு 2023ல் கலப்பட வெல்லம் விற்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் பொன்னுராமன்,கடையில் ஆய்வு செய்து அங்கிருந்த வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்தில் சோதனை செய்தனர். அதில் கலப்படம் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து பொன்னுராமன் மீது குற்றவழக்கு பதியப்பட்டது. இதன் வழக்கு வேடசந்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வாஞ்சிநாதன்,குற்றவாளி பொன்னுராமனுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.