Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வாகும் ஐ.வி.எப்., சிகிச்சை

குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வாகும் ஐ.வி.எப்., சிகிச்சை

குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வாகும் ஐ.வி.எப்., சிகிச்சை

குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வாகும் ஐ.வி.எப்., சிகிச்சை

ADDED : ஜூலை 25, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தவிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என தவிக்கும் பெற்றோர்களுக்கு ஐ.வி.எப்., சிகிச்சை ஒரு வரம் . தம்பதியருக்கு குழந்தைப் பேறு இல்லாததான் காரணங்கள் ஏராளம் உள்ளது. வயது அதிகரித்து திருமணம், குறையை அறிந்த கொள்ள தயக்கம், தெரிந்த பின் சிகிச்சை எடுத்துக்கொள்ள தாமதம் போன்றவை குழந்தை பேறு கிடைக்க சிக்கலை ஏற்படுத்துவதில் பிரதான மாகும். பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள 21 வயது முதல் 30 வயது வரை சரியான காலமாகும். இந்த பருவத்தில் பெண்கள் கர்ப்பத்தை எதிர்கொள்ளும் ஆற்றல், கருத்தரிக்கும் வாய்ப்பு, உருவாகும் கருமுட்டையும் தரம் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதால் குழந்தைப்பேறு கிடைப்பது எளிது. 31 வயதை கடந்து திருமணம் செய்பவர்களுக்கு கருத்தரிக்கும் திறன், கருமுட்டையின் தரம் மெதுவாக குறையும். 35 வயதை கடந்து கருத்தரிப்பது சிக்கலான சூழலை உருவாக்கும். குறை உள்ள சிசு ஏற்பட வாய்ப்பு உருவாகும். பெண்களுக்கு இரு கருக்குழாய்களிலும் அடைப்பு நிரந்தர குறைபாடாக உள்ளது.

ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடு, ஆண்மை சக்தி குறைவு போன்றவை உள்ளது. இதற்கு உணவு முறை கால சூழல், வேலை பளு, போன்றவை காரணிகளாக அமைகின்றன. தம்பதியருக்கு இயற்கையாக குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பே இல்லாத நிலையில் அதன் வரமாக ஐ.வி.எப்., உள்ளது. முறையிலான சோதனை குழாய் குழந்தை, அதாவது டெஸ்ட் டியூப் பேபி.

இயற்கையாக குழந்தை பெறும் முறைக்கு இன் வைவோ பெர்டிலேஷன் (in vivo fertilization) என்பதாகும். இன் விட்ரோ என்பதுதான் ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை முறையிலான குழந்தைப்பேறு. இந்தியாவில் சிறிய நகரங்களில் கூட ஐ.வி.எப். சிகிச்சை பெற்று அதன் மூலம் குழந்தை பாக்கியம் அடைந்து வரும் தம்பதிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது. கர்ப்பப்பை நீக்கப்பப்பட்டவர்கள் அல்லது கருவைச் சுமக்கும் வகையில் கருப்பை இல்லாதவர்கள் வாடகைத் தாய் உதவியுடன் ஐ.வி.எப். மூலம் சொந்த வாரிசை பெற்றுக்கொள்ள முடியும்.

-டாக்டர். செந்தாமரை செல்வி பழநி

98421 31345





      Our Apps Available On




      Dinamalar

      Follow us