/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நீர்நிலை மேம்பாட்டு திட்ட துவக்கம் நீர்நிலை மேம்பாட்டு திட்ட துவக்கம்
நீர்நிலை மேம்பாட்டு திட்ட துவக்கம்
நீர்நிலை மேம்பாட்டு திட்ட துவக்கம்
நீர்நிலை மேம்பாட்டு திட்ட துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 05:31 AM
கன்னிவாடி : திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் கோனுாரில் 'நீரின்றி அமையாது உலகு நீர்நிலைகள் மேம்பாட்டு திட்ட' துவக்க விழா நடந்தது. ஊராட்சி தலைவர் வெள்ளைத்தாய் தலைமை வகித்தார். கிராம தலைவர் சுப்பையன், துணைத் தலைவர் பெருமாள், செயலாளர் சரவணன், பொருளாளர் செல்வராஜ், ஊராட்சி முன்னாள் தலைவர் தங்கப்பாண்டியன், புரவலர் பி.ஆர்.பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
பி.டி.ஓ., மலரவன், ரோட்டரி நிர்வாகிகள் சசிபோம்ரா, ரவிச்சந்திரன், சண்முகம் பேசினர். ரோட்டரி மாவட்ட ஆளுனர் ராஜாகோவிந்தசாமி மந்தைக்குளம் துார் வாரும் பணியை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளைரோட்டரி உதவி ஆளுனர் செல்வக்கனி, தலைவர் திபேஷ், செயலாளர் விக்னேஷ், முன்னாள் தலைவர் நிஷாதேவிரமேஷ், செயலாளர் கிஷோர்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் பவன்ஜிபடேல் செய்திருந்தனர்.