ADDED : ஜூன் 11, 2024 06:42 AM
திண்டுக்கல் : கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கிய நிலையில் 21 நாட்கள் அந்தந்த ஊராட்சிகளில் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் வராமல் தடுக்கும் பொருட்டு கால்நடை பராமரிப்புத்துறையால் ஊராட்சிகளில் நேற்று முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 1 முதல் 10ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
திண்டுக்கல் அருகே பூதிபுரத்தில் இம்முகாமினை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார். கால்நடை மண்டல இணை இயக்குநர் ராஜா, துணை இயக்குநர் ராம்நாத், உதவி இயக்குநர்கள் விஜயகுமார், ராஜேஸ்குமார் கலந்துகொண்டனர்.