/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உயர்நீதிமன்றம் உத்தரவு மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 09, 2024 05:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ராமயன்பட்டியை சேர்ந்தவர் மரியசூசைமேரி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:உயரழுத்த மின்கம்பியை மின்வாரியம் சீரமைக்க தவறியதில் மின்கசிவு ஏற்பட்டதில் 2018 ல் எனது கணவர் ஜெயராஜ்50, இறந்தார்.
மின்வாரியத்தின் அலட்சியமே விபத்திற்கு காரணம். கடமை தவறிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மின்வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
விசாரித்த நீதிபதி சி.சரவணன், மின்சாரம் தாக்கி இறந்தது இறப்பு சான்றிதழில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாடிக்கொம்பு போலீசாரும் வழக்கு பதிந்துள்ளனர். மரணத்திற்கான காரணம் சர்ச்சைக்குரியதாக இல்லை.
மின்வாரியம் அளிக்கும் இழப்பீடு ரூ.2 லட்சம் போதுமானதாக இல்லை என்கிறார் மனுதாரர்.
மனுதாரரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் மின்வாரியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.