ADDED : ஜூன் 09, 2024 05:19 AM
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரத்தில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.ஒட்டன்சத்திரம், வடகாடு, அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் நேற்று மாலை 4 :00 மணியில் இருந்து 6:00 மணி வரை கனமழை பெய்தது.
பலத்த மழை காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லெக்கையன்கோட்டை மூலச்சத்திரம் இடையே ரோடு பணிகள் நடந்து வர ரோடுகளில் மழை நீர் தேங்கியதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர்.