ADDED : ஜூலை 28, 2024 07:14 AM
கன்னிவாடி : கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டி மணி சித்தர் பீடத்தில் குரு பூஜை நடந்தது.
தேவார, திருவாசக பாராயணத்துடன் திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகேஸ்வர பூஜை, குரு பூஜை,மகா தீபாராதனையை தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம் நடந்தது. இதோடு அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.