ADDED : ஜூலை 11, 2024 02:22 AM
கொடைக்கானல்:கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை பூங்காக்களில் நேற்று முதல் பார்வையாளர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது பெரியவர்களுக்கு ரூ. 50, சிறுவர், மாணவர்களுக்கு ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செட்டியார் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்பட்ட நிலையில் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர், மாணவர்களுக்கு ரூ. 20 வசூலிக்கப்படுகிறது.