/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.24 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.24 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.24 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.24 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.24 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2024 10:39 PM
வடமதுரை:திண்டுக்கல்மாவட்டம் வடமதுரையைச்சேர்ந்தவரின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த ஐந்து பேரை போலீசார் தேடுகின்றனர்.
வடமதுரை அகத்தியர் நகரை சேர்ந்தவர் வீரப்பன் 42. டிப்ளமோ படித்த இவரது மகனுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி வடமதுரை சரவணன் ரூ.16 லட்சம் பெற்றார். இவர் மூலம் அறிமுகமாகி இதே வேலைக்காக கடந்த சிலமாதமாக காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய கோட்டம் கவுரிசங்கருக்கு ரூ.3 லட்சம், மணப்பாறை பரத்துக்கு ரூ.ஒரு லட்சம், கோவை லட்சுமிநகர் உஷாவிற்கு ரூ.3 லட்சம், மதுரை பாஸ்கருக்கு ரூ.1.30 லட்சம் என மொத்தம் ரூ.24.30 லட்சத்தை வீரப்பன் வழங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து சரவணன் அரசு பணி உத்தரவை வழங்கி உள்ளார். ஆனால் அது போலி என்பது தெரிந்த வீரப்பன், பணத்தை திரும்பக்கேட்டுள்ளார். இதற்காக வழங்கிய காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியது. பணத்தைதொடர்ந்து கேட்ட வீரப்பனுக்கு ஐந்து பேரும் கொலைமிரட்டல் விடுத்தனர். அவர்களை வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.