/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் 60 நாட்களில் அறுவடையால் மகிழ்ச்சி சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் 60 நாட்களில் அறுவடையால் மகிழ்ச்சி
சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் 60 நாட்களில் அறுவடையால் மகிழ்ச்சி
சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் 60 நாட்களில் அறுவடையால் மகிழ்ச்சி
சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் 60 நாட்களில் அறுவடையால் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 10, 2024 04:33 AM

ஒட்டன்சத்திரம், : கோடைகால சின்ன வெங்காயம் 60 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால் ஒட்டன்சத்திரம் பகுதியில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், பாவாயூர் கொல்லபட்டி, அம்பிளிக்கை, சாமியார்புதுார், அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, கள்ளிமந்தையம், பாலப்பன்பட்டி சுற்றிய பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகமாக பயிரிடப்படுகிறது.
கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட முனைப்பு காட்டி வருகின்றனர்.
வெங்காயம் நடவு செய்த 60 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20 முதல் 30 வரை விற்பனையாகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது.
பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது போல் சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கும் அனுமதி அளித்தால் இன்னும் கூடுதல் விலைக்கு விற்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.