ADDED : ஜூன் 26, 2024 06:51 AM

நிலக்கோட்டை : நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது.
இங்கு தெப்பத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி சிங்கராஜ் அரை நிர்வாண கோலத்தில் வேப்பிலையை உடல் முழுவதும் கட்டிக்கொண்டு கம்பில் செய்யப்பட்ட குத்து ஈட்டியை மனுவுடன் எடுத்து வந்தார். மனுவில் கள்ளர் பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விவகாரத்தில் ஓய்வு நீதிபதி சந்துரு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டு இருந்தது. ஆதிவாசி கோலத்தில் வந்த அவர் தீர்வாய அலுவலர் பால்பாண்டியிடம் மனுவை கொடுத்தார்.