/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விரிவாக்கப் பகுதிகளில் இல்லை வசதிகள்; பயன்படுத்தாத பள்ளிக்கு இடம் அவதிப்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 6வது வார்டு மக்கள் விரிவாக்கப் பகுதிகளில் இல்லை வசதிகள்; பயன்படுத்தாத பள்ளிக்கு இடம் அவதிப்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 6வது வார்டு மக்கள்
விரிவாக்கப் பகுதிகளில் இல்லை வசதிகள்; பயன்படுத்தாத பள்ளிக்கு இடம் அவதிப்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 6வது வார்டு மக்கள்
விரிவாக்கப் பகுதிகளில் இல்லை வசதிகள்; பயன்படுத்தாத பள்ளிக்கு இடம் அவதிப்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 6வது வார்டு மக்கள்
விரிவாக்கப் பகுதிகளில் இல்லை வசதிகள்; பயன்படுத்தாத பள்ளிக்கு இடம் அவதிப்படும் ஒட்டன்சத்திரம் நகராட்சி 6வது வார்டு மக்கள்

காலியிடங்களில் கழிவு நீர்
கே. மாணிக்கம், பா.ஜ., ஒ.பி.சி. அணி மாவட்டச் செயலாளர : ஏ.பி.பி. நகரில் பூங்கா,பள்ளிக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
வாகனம் இயக்கத்தில் சிரமம்
ஒ.பி.காளிதாசன், சமூக ஆர்வலர்,ஏ.பி.பி.நகர்: பழநி கவுண்டன்புதுார் வழியாக செல்லும் ஓடையின் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதன் அருகில் செல்லும் ரோடு சீரமைக்கப்படாமல் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது.
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
சண்முகப்பிரியா, கவுன்சிலர் ( தி.மு.க.,): பழநி கவுண்டன் புதுார் ஓடையை துார்வார அமைச்சரிடம் கோரிக்கை வைத்தன் பயனாக லட்சுமிபுரத்திலிருந்து பழனிகவுண்டன்புதுார் வரை தடுப்புச் சுவர், தரைதளத்துடன் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பழனிக்கவுண்டன்புதுாரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. எரிவாயு மயானம் அருகே உள்ள குளம் மறுகால் செல்லும் வழியில் பாலம் அமைக்கப்பட்டு விபத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஏ.பி.பி . நகரில் பூங்கா,பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏ.பி.பி. நகர் மேற்கு விரிவாக்க பகுதியில் திட்ட மதிப்பீடு அனுமதி கிடைத்ததும் சாக்கடை அமைக்கப்படும். வார்டு பகுதியில் தேவையான இடங்களில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்றார்.