/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விளைச்சலின்றி விலை உயர்ந்த பேரிக்காய் விளைச்சலின்றி விலை உயர்ந்த பேரிக்காய்
விளைச்சலின்றி விலை உயர்ந்த பேரிக்காய்
விளைச்சலின்றி விலை உயர்ந்த பேரிக்காய்
விளைச்சலின்றி விலை உயர்ந்த பேரிக்காய்
ADDED : ஜூலை 29, 2024 11:32 PM

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைச்சல் பாதிப்பால் பேரிக்காய் விலை உயர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மலைப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பேரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கீப்பர், நாடு, தண்ணீர் பேரிக்காய் உள்ளிட்ட வகை உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் 2023 ஆண்டு வந்த விளைச்சலில் 75 சதவீதம் பாதித்துள்ளது. பிப்ரவரியில் சுட்டெரிக்கும் வெயிலால் பூக்கள் உதிர்ந்ததே இதற்கு காரணம். ஜூன் தொடங்கிய சீசனில் இதன் பாதிப்பு எதிரொலித்து மரத்திற்கு ஒன்றிரண்டு காய் கிடைக்கும் சூழல் உருவானது. 2023ல் கிலோ ரூ. 25 க்கு விற்ற நிலை மாறி வரத்து குறைவால் ரூ. 80 க்கு விலை போகிறது.
வியாபாரி வினோத் கூறுகையில், '' 2023 ஐ ஒப்பிடுகையில் விளைச்சல் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. மரத்திற்கு ஒன்று, இரண்டு காய்கள் சேகரிக்கப்படுகின்றன. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. தரமான காய்கள் தரம் பிரித்து தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது'' என்றார்.