Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல் தினவிழா

திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல் தினவிழா

திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல் தினவிழா

திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல் தினவிழா

ADDED : ஜூன் 06, 2024 05:17 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல், ; உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

சமரச தீர்வு மைய வளாகத்தில் நடந்த இதில் நீதிபதிகள் மெகபூப் அலிகான், விஜயகுமார்,முரளிதரன், வேல்முருகன், சரண், மீனாட்சி, தீபா, சோமசுந்தரம், அருண்குமார், ரெங்கராஜ், பிரியா, ஆனந்தி, சவுமியா மேத்யு, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் தீபா பங்கேற்றனர்.

இதேபோல் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ஜி.டி.என்.கல்லுாரி மாணவர்கள் ,ரயில்வே அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 3வது வது பிளாட்பாரத்தில் நடந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார்,வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி,சுகாதார ஆய்வாளர் வினோத்,சியாம்,ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் டெப்ரத்சத்பதி பங்கேற்றனர்.

திண்டுக்கல் வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில் செட்டி நாயக்கன்பட்டி கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ரேஞ்சர் மதிவாணன்,வனவர் பாண்டி,அப்துல் ரகுமான் பங்கேற்றனர்

வடமதுரை: சுக்காம்பட்டி மாமரத்துபட்டியில் ஊராட்சி தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார்.செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார். 100 மரக்கன்று நடப்பட்டன. விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

அய்யலுார் : சீட்ஸ் அறக்கட்டளை சார்பில் குடகிபட்டி கானகம் சுற்றுச்சூழல் கல்வி மையத்தில் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

பெண்கள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பாளர் மேனகா வரவேற்றார். பயிற்சி இயக்குனர் ஐயப்பன், அய்யலுார் வாழ்வாதாரக் திட்ட நாற்றக்கால் மேலாளர் அருண்பாண்டி, தேனீ வளர்ப்பு பயிற்சியாளர் வெள்ளைச்சாமி, ஒருங்கிணைப்பாளர் முகமதுஉவைஸ் பங்கேற்றனர்.

ஆத்துார்: பாவை பவுண்டேசன் சார்பில் ஆத்துார் அரசு மருத்துவமனையில் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் முகாம் நடந்தது. டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார். டாக்டர்கள் லியோன்வினோத்குமார், சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். தலைமை செவிலியர் சகிலாபானு வரவேற்றார்.அலுவலக கண்காணிப்பாளர் தேவி, மருந்தாளுனர் மனோகரன் பேசினர். ஆசிரியர் சோ.ராமு, நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன், பவுண்டேசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் ஏற்பாடுகளை செய்தனர்.

நத்தத்தில் நீதிபதி உதயசூரியா தலைமையில் நீதிமன்ற வளாகம் , தாலுகா அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us