/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வரத்து அதிகரிப்பால் சரிந்த பூக்களின் விலை கிலோ ரூ. 500 ஆக குறைந்த மல்லிகை வரத்து அதிகரிப்பால் சரிந்த பூக்களின் விலை கிலோ ரூ. 500 ஆக குறைந்த மல்லிகை
வரத்து அதிகரிப்பால் சரிந்த பூக்களின் விலை கிலோ ரூ. 500 ஆக குறைந்த மல்லிகை
வரத்து அதிகரிப்பால் சரிந்த பூக்களின் விலை கிலோ ரூ. 500 ஆக குறைந்த மல்லிகை
வரத்து அதிகரிப்பால் சரிந்த பூக்களின் விலை கிலோ ரூ. 500 ஆக குறைந்த மல்லிகை
ADDED : ஜூன் 02, 2024 04:18 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து அதிகமான நிலையில் இன்று முகூர்த்த தினம் என்ற போதிலும் தேவை குறைவின் காரணமாக விலை சரிந்து விற்பனையானது. கிலோ ரூ.1000க்கு விற்ற மல்லிகை ரூ. 500 ஆக குறைந்துள்ளது.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு , ரெட்டியார்சத்திரம், வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
வைகாசி தொடங்கிய நாள் முதலே பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்து விற்பனையானது. அதே நேரத்தில் தொடர் மழையால் வரத்து குறைந்திருந்தாலும் மக்களின் தேவை அதிகரிப்பின் காரணமாக பூ விற்பனையும் களை கட்டியது. தற்போது மழை குறைந்து பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால விற்பனை ஜோராக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் விற்பனை குறைந்து விலையும் சரிந்துள்ளது.
இன்று சுபமுகூர்த்த தினம் என்ற போதிலும் பூக்களின் விலை பாதிக்குப் பாதி வீழ்ச்சி அடைந்திருந்தது. கடந்த வாரம் ரூ. 1000 வரை விற்கப்பட்ட மல்லிகை பாதியாக குறைந்து ரூ 500 க்கு விற்பனையானது. ரூ. 500 விற்ற முல்லை ரூ. 200 , ரூ.700 விற்ற கனகாம்பரம் ரூ. 350 ,ரூ.600க்கு விற்ற ஜாதிப்பூ ரூ. 350 க்கு விற்பனையானது. மேலும், ரூ.100 க்கு மேல் விற்பனையான பட்டன் ரோஸ் ரூ.70, சம்பங்கி ரூ.40, பன்னீர் ரோஸ் ரூ. 30 என விற்பனையானது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்தனர். இன்று மூகூர்த்தம் என்பதால் விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம் .ஆனால் மக்களின் தேவை குறைந்துள்ளதால் விற்பனை மந்தமாகி உள்ளது. வெளி வியாபாரிகளும் வரததால் விலை சரிந்துள்ளது. சில நாட்களில் மீண்டும் விற்பனை சூடுபிடித்துவிடும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.