/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதத்தால் போக்குவரத்தில் சிரமம் பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதத்தால் போக்குவரத்தில் சிரமம்
பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதத்தால் போக்குவரத்தில் சிரமம்
பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதத்தால் போக்குவரத்தில் சிரமம்
பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதத்தால் போக்குவரத்தில் சிரமம்
ADDED : ஜூன் 07, 2024 07:00 AM

சாக்கடையில் மின் கம்பம்
திண்டுக்கல் ஆர்.எம். காலனி 4வது குறுக்கு தெரு சாக்கடை மையப் பகுதியில் மின் கம்பம் இருப்பதால் தண்ணீர் கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது . மழை நேரங்களில் தண்ணீர் ரோட்டில் செல்கிறது .மின்கம்பத்தை மாற்ற வேண்டும். சிவக்குமார், திண்டுக்கல்.
.........-------மாற்றுத்திறனாளிகள் சிரமம்
வடமதுரை கிளை நுாலக வாயில் பகுதியில் குறுக்கிடும் சாக்கடையில் முறையாக மூடி வசதி இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சிரமப்படுகின்றனர். இப்பகுதி சாக்கடைகளை சிமென்ட் சிலாப் கொண்டு மூடி அமைக்க வேண்டும். ராஜா, வடமதுரை.
............--------சாக்கடை இன்றி கழிவுநீர் தேக்கம்
ரெட்டியார்சத்திரம் டி.பண்ணப்பட்டி கிழக்கு தெருவில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது .அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது .காய்ச்சல் பரவும் முன் சாக்கடை அமைக்க வேண்டும். சந்திரன் , டி.பண்ணப்பட்டி.
.................---------சேதமடைந்த ரோடு
வேடசந்துார் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சி குருவனுாரில் இருந்து சீல்நாயக்கன்பட்டி வரை செல்லும் ரோடு சேதமடைந்து மெட்டல் ரோடாக மாறிவிட்டது. போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதால் ரோடை புதுப்பிக்க வேண்டும். முருகேசன், பாலப்பட்டி.
.............-----------திடக்கழிவு மைய கூரை மாயம்
கொடைக்கானல் மன்னவனுார் ஊராட்சி கைகாட்டியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மைய கூரை மாயமாகி உள்ளது. கட்டமைக்கப்பட்ட நாள் முதலே பயனற்றுள்ள இம் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விவேகானந்தன், மன்னவனுார்.
........-----------
குப்பையை எரிப்பதால் அவதி
திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் பிளாஸ்டிக் கலந்த குப்பையை அள்ளாமல் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .புகை மண்டலம் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது .குப்பையை எரிக்காமல் அகற்ற வேண்டும்.ராஜேஷ், திண்டுக்கல்.
.............-----------சேதமடைந்த மேன் ஹோல்
திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது . மேன் ேஹாலை சரி செய்ய வேண்டும். சுதா, திண்டுக்கல்.
.........----------