/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒட்டன்சத்திரத்தில் சதம் அடித்த முருங்கை விலை ஒட்டன்சத்திரத்தில் சதம் அடித்த முருங்கை விலை
ஒட்டன்சத்திரத்தில் சதம் அடித்த முருங்கை விலை
ஒட்டன்சத்திரத்தில் சதம் அடித்த முருங்கை விலை
ஒட்டன்சத்திரத்தில் சதம் அடித்த முருங்கை விலை
ADDED : ஜூன் 19, 2024 02:22 AM

ஒட்டன்சத்திரம்:வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை கிலோ ரூ.100க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சாலைப்புதுார், கொல்லபட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி சுற்றுப்பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தற்போது பெய்த கோடைமழையால் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டன.
இதனால் முருங்கை விளைச்சல் பாதித்து வரத்து மிகவும் குறைந்து விட்டது. பற்றாக்குறையை ஈடுகட்ட துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் விளைந்த முருங்கை தினமும் லாரிகளில் 5 டன் இங்கு கொண்டுவரப்படுகிறது. இருந்த போதிலும் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால் விலை கிடுகிடு என அதிகரித்து வந்தது.
ஜூன் 5ல் ஒரு கிலோ முருங்கை ரூ.40 க்கு விற்ற நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து நேற்று கிலோ ரூ.100 விற்பனை ஆனது.
கமிஷன் கடை உரிமையாளர் ஜமால்தீன் கூறுகையில், முருங்கை வரத்து மிகவும் குறைந்து விட்டதால் இனி வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.