/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நீதிமன்றத்தை விமர்சிக்க வேண்டாம்: கமிஷனர் அறிவுரை பழநி நகராட்சி கூட்டத்தில் நீதிமன்றத்தை விமர்சிக்க வேண்டாம்: கமிஷனர் அறிவுரை பழநி நகராட்சி கூட்டத்தில்
நீதிமன்றத்தை விமர்சிக்க வேண்டாம்: கமிஷனர் அறிவுரை பழநி நகராட்சி கூட்டத்தில்
நீதிமன்றத்தை விமர்சிக்க வேண்டாம்: கமிஷனர் அறிவுரை பழநி நகராட்சி கூட்டத்தில்
நீதிமன்றத்தை விமர்சிக்க வேண்டாம்: கமிஷனர் அறிவுரை பழநி நகராட்சி கூட்டத்தில்
ADDED : ஜூலை 05, 2024 05:42 AM
பழநி: பழநி அண்ணா செட்டி மடத்தில் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பான விவாதத்தில்
'' நீதிமன்றத்தை விமர்சிக்க வேண்டாம். நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்,'' என பழநி நகராட்சி கமிஷனர் லியோன் கூறினார்.
பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி (மா .கம்யூ.,), கமிஷனர் லியோன், நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரன் ,இளநிலை பொறியாளர் பாண்டித்தாய் முன்னிலை வகித்தனர்.
சாகுல் ஹமீது (தி.மு.க.,): குடிநீர் கருமை நிறத்தில் சுகாதாரம் இன்றி வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்திரா (தி.மு.க.,): எங்கள் பகுதியில் தண்ணீர் முறையாக வருவதில்லை.
இளநிலை பொறியாளர் : மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இருநாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது.
சாகுல் ஹமீது (தி.மு.க.,): நாய் தொல்லை அதிகரித்துள்ளது. காந்தி மார்க்கெட் ரோடு சேதமடைந்துள்ளது.
தலைவர்:நடவடிக்கை எடுக்கப்படும்
தீனதயாளன் (தி.மு.க.,): அண்ணா செட்டி மடத்தில் வீடுகள் இடிக்கப்பட்டன. நீதிமன்றத்தில் நகராட்சியின் நிலைப்பாட்டை சரியாக எடுத்துக் கூறாத நகராட்சி வழக்கறிஞரை கண்டிக்கிறேன்.
கமிஷனர்: நீதிமன்றத்தை இங்கு விமர்சிக்க வேண்டாம். நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்.
தலைவர்: பல ஆண்டுகள் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தியது வலி நிறைந்த விஷயம். இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்.
சுரேஷ் (தி.மு.க.,): கோயில் கட்டடங்களுக்கு முறையாக நகராட்சி இடம் அனுமதி பெற வேண்டுமா.
நகர அமைப்பு அலுவலர்: கட்டட அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் டி.டி.சி.பி., அனுமதி பெற வேண்டும்.
தலைவர்: டி.டி.சி.பி. அனுமதி பெறவில்லை எனில் நடவடிக்கை எடுங்கள்.
தீனதயாளன் (தி.மு.க.,): கோயில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வையாபுரி குளத்தில் கலக்கிறது .
சுரேஷ் (தி.மு.க.,): செக்போஸ்ட் அமைக்க நகராட்சியிடம் தடையில்லா சான்று பெறப்பட்டதா
தலைவர்: சான்று பெறவில்லை
தீனதயாளன் (தி.மு.க.,): முடி கொட்டகை அமைக்க அனுமதி பெறப்பட்டதா
ஜெயேந்திர வேல்(நகர அமைப்பு ஆய்வாளர் ): அனுமதி பெறவில்லை . கோயில் தரப்பில் வழக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அது குறித்த நீதிமன்ற குறிப்பு தற்போது இல்லை.
செபாஸ்டியன் (தி.மு.க.,): திருவள்ளுவர் சாலையில் சாய்பாபா கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை .
நகரமைப்பு ஆய்வாளர்: நீதிமன்றத்தில் தடையானை பெற்றுள்ளனர். அதுவரை நடவடிக்கை எடுக்க முடியாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.