ADDED : ஜூலை 15, 2024 04:28 AM

பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வின்ச்,ரோப்கார் மூலம் முருகன் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர். அய்யம்புள்ளி ரோடு பகுதியில் நீதிமன்ற உத்தரவின் படி வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. பூங்கா ரோடு, அருள் ஜோதி வீதி பகுதிகளில் போலீசார் வாகனங்களை நிறுத்தும் இடங்களை முறைப்படுத்தி உள்ளனர்.