/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் கோயில் மண்டபம் இடித்து அகற்றம் திண்டுக்கல்லில் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
திண்டுக்கல்லில் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
திண்டுக்கல்லில் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
திண்டுக்கல்லில் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
ADDED : ஜூலை 26, 2024 12:23 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கோவிந்தாபுரம் புதுநாயக்கர் 2வதுதெரு பகுதியில் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்திலிருந்த விநாயகர் கோயில் மண்டபத்தை நீதிமன்ற உத்தரவு படி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் புதுநாயக்க 2வது தெரு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் கோயில் உள்ளது.
இக்கோயிலின் அருகில் சில ஆண்டுகளுக்கு முன் மண்டபம் கட்டப்பட்டது.
இது மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் என்பதால் இதை அகற்ற அதே பகுதியை சேர்ந்த தம்பான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிபதிகள் மண்டபத்தை அகற்ற உத்தரவிட்டனர் அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான நகரமைப்பு அலுவலர்கள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண்டபத்தை அகற்ற முயன்றனர். அங்கு அப்பகுதி மக்கள் குவிந்தனர். பதட்டமான நிலை உருவாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
பா.ஜ.,மாவட்ட தலைவர் தனபால் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த , கோயிலை இடிக்கவில்லை.
மாநகராட்சி நிலத்திலிருக்கும் மண்டபத்தை தான் இடிக்க போகிறோம் என அதிகாரிகள் கூற மக்கள் கலைந்து சென்றனர்.இதன் பின் மண்டபம் இடிக்கப்பட்டது.