ADDED : ஜூலை 13, 2024 04:55 AM
திண்டுக்கல், : மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க மாவட்ட மண்டல தலைவர் கிருபாகரன் அறிக்கை: கல்விக்கான உபகரணங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உயர்வரி விகிதங்கள் 12 சதவீதமாக குறைக்க வேண்டும்.
பூஜை பொருட்கள் மீதான வரியினை ரத்து செய்யப்பட்டு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்தும் இன்றியமையாத பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவரிவிலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.