ADDED : ஜூலை 25, 2024 06:57 AM
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி அருகே பெத்தநாயக்கன்பட்டி பிரிவில் கரிகாரன்புதுரை சேர்ந்த பிரசன்னா 28, ஓட்டல் வைத்துள்ளார்.
இவருக்கும் நெய்க்காரப்பட்டி தமிழரசன் 29க்கும் தகராறு உள்ளது. இந்நிலையில் நெய்க்காரப்பட்டி சேர்ந்த வீரக்குமார் 24, ஹக்கீம் 25, ஆகியோருடன் சேர்ந்து பிரசன்னா ஒட்டல் வந்து தகராறு செய்தனர். தமிழரசன், வீரக்குமார், ஹக்கீம் ஆகியோரை பிரசன்னா கத்தியால் வெட்டினார். வீரக்குமார் குழுவினர் பிரசன்னாவை தாக்கியதில் காயமடைந்தார். நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.