Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பஞ்சு மில்லில் தீ விபத்து

பஞ்சு மில்லில் தீ விபத்து

பஞ்சு மில்லில் தீ விபத்து

பஞ்சு மில்லில் தீ விபத்து

ADDED : ஜூன் 03, 2024 04:01 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் மின்கசிவால் தனியார் பஞ்சுமில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் செட்டிநாயக்கன்பட்டியில் சொந்தமாக பஞ்சு மில் நடத்துகிறார்.

நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பஞ்சுமில்லில் தீப்பற்றி எரிந்தது.

திண்டுக்கல் தீயணைப்பு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில் மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் அங்கிருந்த பொருட்கள் முழுவதும் சேதமானது.

விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. பொருட்கள் சேதமானது.

தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us