ADDED : ஜூன் 11, 2024 06:40 AM

வடமதுரை : வடமதுரை கொல்லப்பட்டி புதுார் அருகே சிக்கம்மாள்புரத்தில் கற்பக விநாயகர், சிக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர்.
சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாட்டினை கோயில் பூஜாரி சவடமுத்து, பெத்த காப்பு திருப்பதி செய்திருந்தனர்.