ADDED : ஜூன் 11, 2024 06:35 AM
திண்டுக்கல் : 2023 --24ம் கல்வியாண்டில் காமராஜர் விருதுக்கு தேர்வான பள்ளிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது.
அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு விரிவுப்படுத்துதல், அரசுத் திட்டங்களை செயல்படுத்துதல், தேர்ச்சி விகிதம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்து ஆண்டுதோறும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. மாவட்ட வாரியாக தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என 4 நிலைகளில் ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படும். அந்த வகையில், 2023---24 கல்வி ஆண்டில் இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி, கொம்பேறிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, உண்டார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செல்லக்குட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டன.
இந்த பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம், ரூ.75ஆயிரம், ரூ.50ஆயிரம், ரூ.25 ஆயிரம் வீதம் பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.