/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம் வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம்
வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம்
வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம்
வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம்
ADDED : ஜூலை 22, 2024 05:39 AM

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில ஜூலை 13ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 25 வரை 13 நாள் ஆடித்திருவிழா நடக்கிறது. நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜூலை 19 இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.
முன்னதாக கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமமும், மதுரை அழகர்மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சன்னதியிலிருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர, முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார். மாலை 4:40 மணிக்கு பக்தர்கள் கரகோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், திருச்சி ரோடு வழியே நகரை வலம் வந்தது. பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், செயல் அலுவலர் அன்னலட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.