ADDED : மார் 13, 2025 05:33 AM
வடமதுரை: வடமதுரை பகுதியில் 2005, 2007, 2008 ல் மட்டும் கன மழை பெய்து குளங்கள் நிரம்பின. போதிய மழையின்றி இப்பகுதியில் குளங்கள் நிரம்பாத நிலை தொடர்கிறது. கிணறுகள் வறண்டு, வயல்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அவற்றில் இருந்து பாசனத்திற்கு நீர் எடுக்கும் நிலையே பரவலாக உள்ளது.
புல், புதர்கள் காய்ந்து கருகி வருகின்றன. விவசாய நிலங்களில் யாரேனும் கவனக்குறைவாக தீத்துண்டுகளை வீசி சென்றால் அடுத்தடுத்து பல மீட்டர் துாரத்திற்கு தீ பரவும் சம்பவங்கள் நடக்க துவங்கின. பெய்த மழை புல், புதர் தீப்பற்றுவதை தடுக்க உதவும் வகையில் இருந்தது.