/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பூப்பந்தாட்ட போட்டி: மதுரை அணி வெற்றி பூப்பந்தாட்ட போட்டி: மதுரை அணி வெற்றி
பூப்பந்தாட்ட போட்டி: மதுரை அணி வெற்றி
பூப்பந்தாட்ட போட்டி: மதுரை அணி வெற்றி
பூப்பந்தாட்ட போட்டி: மதுரை அணி வெற்றி
ADDED : ஜூலை 28, 2024 08:19 AM
திண்டுக்கல் : பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் திண்டுக்கல் மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் ஒருங்கிணைந்து பி.எஸ்.என்.ஏ. திண்டுக்கல் ஓபன் - 2024 போட்டி நடத்தி வருகிறது. நேற்று பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது.
பெண்கள் பிரிவில் மதுரை ஓ.சி.பி. எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. சென்னை சி.எஸ்.ஐ. ஜெஸ்சி மோசஸ் அணி இரண்டாமிடம், சேலம் எல்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம், கோவை ஜி.ராமசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி அணி 4ம் இடம், கரூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி 5 ம் இடம் பிடித்தது.
ஆண்கள் பிரிவில் வாட்ராப் தி இந்து மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. சிலுக்குவார்பட்டி சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி 2ம் இடம், அரியலுார் அரசு பள்ளி 3ம் இடம், திருவிடைமருதுார் திருவாவடுதுறை ஆதீனம் பள்ளி 4ம் இடம், திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி 5ம் இடம் பிடித்தது.
கிருஷ்ணா பள்ளி செயலாளர் சுரேஷ், ஓ.சி.பி.எம் மேனிலைப் பள்ளி செயலாளர்,ஸ்டான்லி ஜெயராஜ், மதுரை பள்ளி தலைமை ஆசிரியை மேரி, திருநெல்வேலி பூப்பந்து சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன், மதுரை மாவட்ட பூப்பந்து சங்க செல்வராஜ், பி.எஸ்.என்.ஏ. கல்லூரி முதல்வர் வாசுதேவன், மதுரை மாவட்ட பூப்பந்து சங்க மாநில சாம்பியன் காசிம் பரிசு வழங்கினர்.