ADDED : ஜூலை 25, 2024 06:46 AM
வடமதுரை: வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் மூணாண்டிபட்டி அருகே ஊராளிபட்டி பிரிவு தனியார் வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது.
நேற்று அதிகாலை 3:30 மணிக்கு எலக்ட்ரிக் ரம்பத்துடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை அறுத்து கொள்ளை அடிக்க முயற்சித்தனர். முயற்சி பலன் அளிக்கத்தால் கதவை மூடி விட்டபடி சென்று விட்டனர். ரூ.4.40 லட்சம் தப்பியது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.