பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் உலக நலன் வேண்டின அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன். புனித நீரில் பெரியாவுடையாருக்கு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கந்த விலாஸ் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.