Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகை

வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகை

வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகை

வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகை

ADDED : ஜூலை 07, 2024 02:49 AM


Google News
திண்டுக்கல்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும்.

இத்தொகை பெற ஆதிதிராவிடர்/பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000. தமிழகத்திலேயே கல்வி முடித்தவர்களாகவும், வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

அரசு,பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெற்றிருக்கக்கூடாது. பள்ளி, கல்லுாரியில் சென்று படிப்பவராக இருக்கக்கூடாது.

இத்தகுதியுள்ளோர் நேரில் வந்து விண்ணப்ப பெற்றுக்கொள்ளலாம். https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து வரும் ஆக 31ற்குள் வழங்க வேண்டும்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு மாதம் ரூ.200, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.400,பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித்தொகையாக அந்தந்த பயனாளியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை 10ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றோருக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றோருக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us