ADDED : ஜூன் 13, 2024 07:00 AM
திண்டுக்கல்: மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த்42.
திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்கிறார். ஜூன் 9ல் சிறுமலை ரோட்டில் வனத்துச் சின்னப்பர் கோயில் அருகே நடந்த வந்தார். சிவகங்கை திருப்பத்துார் காரையூரை சேர்ந்த விக்னேஸ்வரன் 25, ஓட்டி வந்த டூவீலர் ஆனந்த் மீது மோதியது. இருவரும் காயமடைந்தனர். நேற்று விக்னேஸ்வரன் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.