Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தனித்தீவு போல் பூங்கா...வடிகால் இல்லாத ரோடுகள்... தவியாய் தவிக்கும் கூட்டுறவு நகர் குடியிருப்போர்

தனித்தீவு போல் பூங்கா...வடிகால் இல்லாத ரோடுகள்... தவியாய் தவிக்கும் கூட்டுறவு நகர் குடியிருப்போர்

தனித்தீவு போல் பூங்கா...வடிகால் இல்லாத ரோடுகள்... தவியாய் தவிக்கும் கூட்டுறவு நகர் குடியிருப்போர்

தனித்தீவு போல் பூங்கா...வடிகால் இல்லாத ரோடுகள்... தவியாய் தவிக்கும் கூட்டுறவு நகர் குடியிருப்போர்

ADDED : ஜூன் 19, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்,ஜூன் 19 -சேதமான ரோடுகள், தண்ணீர் தேங்கி தீவு போல் உள்ள பூங்கா, எந்நேரமும் எரியும் தெருவிளக்குகள்,வடிகால்கள் இல்லாத தெருக்கள்,கழிவுநீரில் ஜோராக நடக்கும் கொசு உற்பத்தி,ரோட்டோரங்களில் தேங்கிய குப்பை என திண்டுக்கல் கூட்டுறவு நகரில் குடியிருப்போர் பரிதவிப்பு தொடர்கிறது.

திண்டுக்கல் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச்சங்க கவுரவ ஆலோசகர் பச்சையப்பன்,செயலாளர் அமரசுந்தரி,பொருளாளர் சசிகலா,கவுரவ தலைவர் ரமாசீனிவாசன்,நிர்வாகிகள் ராகிணி,முத்துமாலா,மரகதம்,ராஜேஸ்வரி,சிறப்பு ஆலோசகர் ராஜேந்திரன் கூறியதாவது: கூட்டுறவு நகரில் எங்கு பார்த்தாலும் மாடுகளாக சுற்றித்திரிகின்றன. தெரு நாய்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பல பகுதிகளில் ரோடுகள் சேதமாகி உள்ளது. புகார்கள் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மழை நேரங்களில் காவேரி தெருவில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. மல்லிகை தெருவில் உள்ள பூங்கா 3 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பில்லாமல் உள்ளது.

தொற்று கேந்திரமாக

இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமாகி துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது. மழை நேரம் மட்டுமில்லாமல் வெயில் நேரங்களிலும் பூங்காவில் தண்ணீர் தேங்கி நடை பயிற்சி மேற்கொள்ள வரும் மக்களை பாடாய்படுத்துகிறது. எங்கு பார்த்தாலும் புற்கள் வளர்ந்து காடுகள் போல் காட்சியளிக்கிறது. ஊராட்சி நிர்வாகத்தில் பல முறை புகார்கள் கொடுத்து விட்டோம். எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. பூங்காவை ஒருமுறை ஊராட்சி நிர்வாகம் சீரமைத்து தந்தால் போதும் .அதன்பின் சங்கத்தினரே பராமரித்து கொள்கிறோம். மல்லிகை தெருவில் பல பகுதிகளில் தெரு விளக்குகள் பகல் நேரங்களிலும் எரிவதால் மின்சாரம் தான் செலவாகிறது. அதை முறையாக கண்காணிக்க வேண்டும். நக்கீரன் தெருவில் வடிகால் இல்லாததால் எந்நேரமும் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் எங்கள் பகுதி தொற்றுபரப்பும் கேந்திரமாக உள்ளது. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு கழிவுநீர் தேங்குகிறது. இதனால் பகல் மட்டுமல்லாது இரவிலும் கொசுக்கள் மக்களை கடித்து துன்புறுத்துகிறது.

எங்கும் ஆக்கிரமிப்பு

டெங்கு பரவும் அபாயமும் இருப்பதால் அதிகாரிகள்கவனம் செலுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டிய அதிகாரிகள் எங்கள் பகுதியை மறந்து விடுகின்றனர். குப்பை முறையாக அள்ளாததால் ரோட்டோரங்களில் பல பகுதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் கூட்டுறவு நகரின் மதிப்பே கெட்டுப்போகிறது. நக்கீரன் தெரு,குறிஞ்சி, முல்லை,மல்லிகை, காவேரி, இளங்கோ,கம்பன்,செண்பகம் தெரு உள்ளிட்ட தெருக்களில் வீட்டு முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மக்கள் ரோடுகளில் நடமாட முடியவில்லை. வாகனங்களும் செல்ல முடியவில்லை என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us