ADDED : ஜூலை 17, 2024 12:28 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட கூட்டம் மாநில துணைச்செயலர் எரியோடு கருப்பையா, மாவட்ட துணைச் செயலர் அய்யாவு தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் கருப்பையா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தங்கம் பெரியசாமி, முருகன், திருப்பதி, சேகர், மூர்த்தி, சின்ராஜ், காமாட்சி, சஞ்சீவி, ஆறுமுகம், குணா ஆறுமுகம், மாசி கோந்தன், சங்கர் பங்கேற்றனர். மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.