/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; எங்கும் மணல் திருட்டு: விவசாயிகள் ஆதங்கம் கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; எங்கும் மணல் திருட்டு: விவசாயிகள் ஆதங்கம்
கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; எங்கும் மணல் திருட்டு: விவசாயிகள் ஆதங்கம்
கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; எங்கும் மணல் திருட்டு: விவசாயிகள் ஆதங்கம்
கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; எங்கும் மணல் திருட்டு: விவசாயிகள் ஆதங்கம்
ADDED : ஜூலை 20, 2024 12:59 AM

திண்டுக்கல் : ''விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை கண்துடைப்பிற்காக நடத்தவேண்டாம். எங்கு பார்த்தாலும் மணல் திருட்டுகள் ஜோராகநடக்கிறது ''என விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயி ராமசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் நேர்முக உதவியாளர்( கோட்டைக்குமார் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் ராமராஜ், இணை இயக்குநர் அனுசியா,தோட்டக்கலை துணைஇயக்குநர் காயத்திரி முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் விவாதம்
மாரிமுத்து,கணவாய்பட்டி:மழைக்காலங்களில் வழங்கப்படும் செடிகளை தரமானதாக வழங்க வேண்டும். உரமும் தற்போதே வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீர் உறிஞ்சும் உறை கிணறுகள் அமைத்தால் பலரும் பயனடைவார்கள். அதிகாரிகள் இதுபோன்றவற்றிற்கு காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் உதவி இயக்குநர்:நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்துசாமி,வேடசந்துார்:குஜிலியம்பாறை தாசில்தார் அலுவலகத்தில் எந்த பணியும் வேகமாக நடப்பதில்லை. எதை கொடுத்தாலும் கால தாமதம் ஏற்படுகிறது. கேட்டால் ஆள் பற்றாக்குறை என்கின்றனர்.
ராஜேந்திரன்,ஒட்டன்சத்திரம்:தங்கச்சியம்மாபட்டி ரேஷன் கடைகளில் சேலைகள் வழங்கவில்லை. நங்காஞ்சியாற்றில் கழிவுகள் கொட்டப்படுகிறது. கழிவுநீரும் கலக்கிறது. இதனால் ஆற்றில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
கலெக்டர் நேர்முக உதவியாளர் :இதை ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து பிரச்னையை சரி செய்து திங்கள் கிழமை நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுத்தம் செய்த புகைபடங்களை காண்பிக்க வேண்டும்.
ராமசாமி,கீரனுார்:பழநி பகுதிகளில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துகிறது. விவசாயிகளை தாக்குவதால் உயிரிழக்கும் சம்பவங்களும்அடிக்கடி நடக்கின்றன. வனத்துறை வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறது. கட்டுப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தங்கவேல்,புங்கம்பாடி:எங்கள் பகுதியில் காட்டுமாடுகள் தொல்லை அதிகளவில் உள்ளது. பயிர்களை நாசம் செய்கிறது. வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளனர் .
கலெக்டர் நேர்முக உதவியாளர் :ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.ராமசாமி,வேடசந்துார்:குடகனாறு பிரச்னைக்கு இன்னும் ஒரு தீர்வு வரவில்லை. எப்போது தான் அதிகாரிகள் தீர்வுகாண போகிறீர்கள்.பல பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.இதனால் நீர் வழித்தடம் இல்லாம் குளங்கள் மண்ணோடு மண்ணாகபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நானும் 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார் கொடுத்து விட்டேன். இன்னும் அதற்கோர் தீர்வு வரவில்லை. விவசாயிகள் மீது வழக்கு பதியும் அதிகாரிகள் ஏன் குளங்களை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைகண்துடைப்பிற்காக நடத்த வேண்டாம்.எங்கு பார்த்தாலும் மணல் திருட்டுகள் ஜோராக நடக்கிறது. அதையும்தடுக்க அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் உள்ளீர்கள்.
கலெக்டர் நேர்முக உதவியாளர் :ஆக்கிரமிப்புகள் எங்கிருந்தாலும் உடனே அகற்றப்படும். மணல் திருட்டுகளை தடுப்பதற்கான குழுக்கள் அமைத்துள்ளோம். விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம்என்றார்.