/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மூன்று ஆண்டுகளில் 7666 பஸ்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல் மூன்று ஆண்டுகளில் 7666 பஸ்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல்
மூன்று ஆண்டுகளில் 7666 பஸ்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல்
மூன்று ஆண்டுகளில் 7666 பஸ்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல்
மூன்று ஆண்டுகளில் 7666 பஸ்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல்
ADDED : ஜூலை 23, 2024 05:46 AM

ஒட்டன்சத்திரம்: ''மூன்று ஆண்டுகளில் 7666 பஸ்களை ரூ.5000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்து மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது''என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 11 புதிய பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்களாக இயக்கிடவும் பஸ் போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு சேவையை ஏற்படுத்திடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளில் மட்டும் 7666 பஸ்களை ரூ.5000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்து மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நகராட்சி தலைவர் திருமலைசாமி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, அவைத்தலைவர் மோகன், துணைச் செயலாளர் ராஜாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன்,தர்மராஜ், சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் பாலு, பொது மேலாளர் துரைச்சாமி, வணிக மேலாளர் சக்தி, கோட்ட மேலாளர் ரமேஷ், தொழில்நுட்ப மேலாளர்கள் சத்தியமூர்த்தி, சண்முக குமார், கிளை மேலாளர்கள் சிவசாமி, ஜெயக்குமார் பங்கேற்றனர்.