ADDED : ஜூலை 29, 2024 06:28 AM
சாணார்பட்டி : சாணார்பட்டி கணவாய்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் 35. இவர் கோபால்பட்டியில் டூவீலர் ஒர்க் ஷாப் நடத்துகிறார். இவர் ஜூலை 25ல் பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். மீண்டும் காலையில் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு டூவலீர்களின் உதிரி பாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் எஸ்.ஐ., ராஜேந்திரன்,சிறப்பு எஸ்.ஐ., வெள்ளத்துரை, முருகன் போலீசார் தனிப்படை போலீசார் கோபால்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபால்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் 53,சந்திரபோஸ் 35, என்பதும் பாண்டியராஜன் கடையில் புகுந்து டூவீலர் உதிரிபாகரங்களை திருடியதும் தெரிந்தது. சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.