ADDED : ஜூன் 01, 2024 05:41 AM

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மதிப்பெண் 600க்கு 566, 2ம் மதிப்பெண் 564, 3ம் மதிப்பெண் 554, கணினி பயன்பாடு, வணிகவியல் பாடங்களில் தலா 5 மாணவர்கள், கணினி அறிவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களில் தலா 2 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 495 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இப்பள்ளி சாதித்துள்ளது.
பயிற்றுவித்த ஆசிரியர்களை, விவேகானந்தா கல்வி குழுமத் தலைவரான தாளாளர் ரங்கசாமி பாராட்டி பரிசளித்தார். தலைமை ஆசிரியர் ரங்கசாமி உடன் இருந்தார்.