/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இதையும் கவனியுங்க பணி சுமையால் சத்துணவு பணியாளர்கள் அவதி காலி பணி இடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பு இதையும் கவனியுங்க பணி சுமையால் சத்துணவு பணியாளர்கள் அவதி காலி பணி இடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பு
இதையும் கவனியுங்க பணி சுமையால் சத்துணவு பணியாளர்கள் அவதி காலி பணி இடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பு
இதையும் கவனியுங்க பணி சுமையால் சத்துணவு பணியாளர்கள் அவதி காலி பணி இடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பு
இதையும் கவனியுங்க பணி சுமையால் சத்துணவு பணியாளர்கள் அவதி காலி பணி இடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பு
ADDED : ஜூன் 18, 2024 05:30 AM

எரியோடு : திண்டுக்கல் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியான பணியிடங்களை பல ஆண்டுகளாக நிரப்பாமல் இழுத்தடிக்கப்படுவதால் இருக்கும் பணியாளர்களே கூடுதல் மையங்களையும் சேர்த்து பணி செய்யும் நிலையால் கடும் மன உளைச்சலுடன் ஆளாகின்றனர்.
சத்துணவு மையங்களில் தலா ஒரு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இருக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட காலி இடங்களை நிரப்பாமல் உள்ளனர். இதனால் மாவட்ட அளவில் பாதி அளவிற்கு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
பல மையங்களில் ஒரு சமையலர் மட்டுமே அதிகாரப்பூர்வ ஊழியராக பணியில் இருக்கும் நிலையில் ஒரு அமைப்பாளே ர ஒன்று முதல் 5 மையங்கள் வரையிலும் பொறுப்பாளராக பணியாற்றும் நிலை உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மாணவர் வருகை பதிவை பொறுத்தே செலவினம், பொருட்களின் அளவு இருக்கும் என்பதால் இதற்கான கணக்குகளை பராமரிப்பது சத்துணவு அமைப்பாளரின் முக்கிய பணி. ஒரு அமைப்பாளர் பல மையங்களுக்கு செல்வதாலும் சில மையங்கள் அதிக துார இடைவெளியில் இருப்பதாலும் கூடுதல் போக்குவரத்து செலவு, உடல் சோர்வு ஏற்படுவதால் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.இதை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
.............
-
சமையல் சவாலானது
-
சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சமைத்து போடுவது ஒரு சாதாரண பணி என நினைக்கக் கூடாது. பல குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் ஒருசேர பள்ளியில் படிக்கின்றனர். அந்த குழந்தைகள் அனைவருக்கும் பாதுகாப்பான உணவை தயார் செய்து வழங்க வேண்டிய பொறுப்பு என்பது சவாலானது. அன்றைய பள்ளிக்கு வந்த சத்துணவு சாப்பிடும் குழந்தைகளை கணக்கிட்டு தேவைக்கு ஏற்ப உணவு சமைக்க வேண்டும். பற்றாக்குறையாக சமைக்க முடியாது. பொருட்களுக்கு கணக்குகளை அரசுக்கு முறையாக சமர்ப்பிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு எதாவது சிறு பிரச்னை என்றாலும் கண்காணித்து உரிய சிகிச்சைக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் அமைப்பாளருக்கு உள்ளது. பணியிடங்களில் இனியும் அரசு அலட்சியம் காட்டாமல் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ஜெயக்குமார், ஊடகப் பிரிவு செயலாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., நல்லமநாயக்கன்பட்டி, எரியோடு.
...........