/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளி கல்லுாரிகளில் கார்கில் வெற்றி தினம் பள்ளி கல்லுாரிகளில் கார்கில் வெற்றி தினம்
பள்ளி கல்லுாரிகளில் கார்கில் வெற்றி தினம்
பள்ளி கல்லுாரிகளில் கார்கில் வெற்றி தினம்
பள்ளி கல்லுாரிகளில் கார்கில் வெற்றி தினம்
ADDED : ஜூலை 27, 2024 06:41 AM

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கார்கில் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன் வீரவணக்கம் செலுத்தினர்.
* சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்ட குழுவினர், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது. தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலையில் கார்கில் வெற்றி தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. என்.எஸ். எஸ்., திட்ட அலுவலர்கள் ஜெயஜோதி, வினோதினி ஏற்பாடு செய்திருந்தனர்.
* ஒட்டன்சத்திரம் வட்டார தேசிய ராணுவ முன்னாள் வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டாரத் தலைவர்
எம்.எஸ். மணி பேசினார். செயலாளர் திருமலைசாமி, துணைத்தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் பால் ஜான்சன் நன்றி கூறினார்.