/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மோட்டார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ மோட்டார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ
மோட்டார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ
மோட்டார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ
மோட்டார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ
ADDED : ஜூன் 02, 2024 04:26 AM

கோபால்பட்டி: கோபால்பட்டி தனியார் பில்டிங்கில் கணவாய்பட்டி சக்கிலியன் கொடையைச் சேர்ந்த பழனியப்பன் 34, சொந்தமான மோட்டார் உதிரி பாகம் விற்பனை கடை உள்ளது.நேற்று முன்தினம் இரவு பழனியப்பன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை 6:00 மணிக்கு கடையின் உள் பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு அந்த வழியாக சென்ற மக்கள் பழனியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து பார்த்தபோது கடையில் உள்ளே பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததை கண்டார்.
நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்து அக்கம்பக்கத்தில் பரவாமல் தடுத்தனர். இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்தது. மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.