/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மழை பெய்தும் பரப்பலாறு அணைக்கு இல்லை நீர் வரத்து மழை பெய்தும் பரப்பலாறு அணைக்கு இல்லை நீர் வரத்து
மழை பெய்தும் பரப்பலாறு அணைக்கு இல்லை நீர் வரத்து
மழை பெய்தும் பரப்பலாறு அணைக்கு இல்லை நீர் வரத்து
மழை பெய்தும் பரப்பலாறு அணைக்கு இல்லை நீர் வரத்து
ADDED : ஜூன் 02, 2024 04:25 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் கோடை மழை பெய்த போதிலும் பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை.
ஒட்டன்சத்திரம், சுற்றிய கிராமப் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. சில இடங்களில் கனமழையாகவும், சில இடங்களில் சாரல் மழை ஆகவும் பெய்தது.பரப்பலாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. அணையில் தற்போது 64 அடி தண்ணீர் உள்ளது.
அணை நிரம்பினால் உபரி நீர் நங்காஞ்சி ஆறு வழியாக வரும். இந்த தண்ணீரைக் கொண்டு விருப்பாச்சி, பெருமாள் குளம், சடையன்குளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் என பல குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கும்.
மேலும் இடையகோட்டையில் உள்ள நல்லதங்காள் அணை கட்டிற்கும் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி கிடைக்கும்.