/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கைது சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கைது
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கைது
ADDED : மார் 14, 2025 05:53 AM

திண்டுக்கல்: ஓய்வூதியத்திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க., அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக ஓய்வூதியத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும். வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பரெடரிக்எங்கெல்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தாமஸ்சேவியர், ஆரோக்கியராஜ். புனிதன் முன்னிலை வகித்தனர். மாநில நிதிக்காப்பாளர் ஜான்லியோசகாயராஜ் பேசினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் குன்வர்ஜோஸ்வாவளவன், மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, வணிகவரி பணியாளர் சங்க முன்னாள் மாநில செயலர் திரவியராஜா, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்க மாவட்ட செயலர் ஜஸ்டின் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோஷமிட்டபடியே பஸ் ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுபட்டனர். 20 க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.