Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ டாக்டரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில் வாலிபர் கைது

டாக்டரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில் வாலிபர் கைது

டாக்டரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில் வாலிபர் கைது

டாக்டரை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில் வாலிபர் கைது

ADDED : செப் 29, 2025 02:10 AM


Google News
அரூர்;அரூர் அருகே, காரில் சென்ற ஹோமியோபதி டாக்டரை கடத்தி பணம்,, நகை பறித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன், 37. ஹோமியோபதி டாக்டர். இவர், தென்கரைக்கோட்டையில், சண்முகா மெடிக்கல் மற்றும் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த, 25ல் இரவு, 10:15 மணிக்கு மருத்துவமனையை மூடிவிட்டு, கியா காரில் தென்கரைகோட்டையில் இருந்து வேப்பிலைப்பட்டிக்கு சென்றார். தென்கரைக்கோட்டை நாயக்கர் தெரு அருகே சென்றபோது, 25 வயது மதிக்கத்தக்க, 3 வாலிபர்கள் காரை நிறுத்தி, தங்களது ஸ்கூட்டி டயர் பஞ்சர் ஆகியுள்ளது என கூறியுள்ளனர். இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய அவரை, 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி, அவரது காரில் ஏற்றிக்கொண்டு, வாணியாறு அணை மற்றும் சேலம் மாவட்டம், டேனிஸ்பேட்டை வரை அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவரிடமிருந்து, 40,000 ரூபாய் மற்றும் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், 13,000 ரூபாய், அவர் கழுத்தில் அணிந்திருந்த, 2.5 பவுன் செயினை பறித்துள்ளனர். பின், அதிகாலை, 4:00 மணிக்கு மணிவண்ணனை கடத்திய அதே இடத்திற்கு வந்து காரையும், அவரையும் விட்டுச் சென்றனர். இது குறித்து, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் டாக்டர் மணிவண்ணனை கடத்தியதாக, வாணியாறு அணை அகதிகள் முகாமை சேர்ந்த சபரிநாதன், 19, என்பவரை போலீசார் கைது செய்து, தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us