/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாட்டம் அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாட்டம்
அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாட்டம்
அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாட்டம்
அரசு பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாட்டம்
ADDED : செப் 19, 2025 01:28 AM
பாப்பிரெட்டிப்பட்டி :பாப்பிரெட்டிப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை படை சார்பில், உலக ஓசோன் தின விழா கொண்டாட்டம் தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ரகு, ஆசிரியர்கள் பார்த்திபன், ஜெகஜீவன் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி வரவேற்றார்.
இந்நிகழ்வில் ஓசோன் படலத்தை காக்க வேண்டும்.
இயற்கையை பேணி காக்க வேண்டும். நெகிழியை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி மாணவர்கள் பேரணி நடந்தது. தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து உறுதிமொழி எடுத்தனர். ஒவ்வொரு மாணவரும் தங்களது தாயார் பெயரில், மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட வலியுறுத்தப்பட்டது.