/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாங்காய் லோடு வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி; 12 பேர் காயம் மாங்காய் லோடு வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி; 12 பேர் காயம்
மாங்காய் லோடு வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி; 12 பேர் காயம்
மாங்காய் லோடு வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி; 12 பேர் காயம்
மாங்காய் லோடு வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி; 12 பேர் காயம்
ADDED : மே 30, 2025 01:32 AM
சூளகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படியிலிருந்து மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு பிக்கப் வேன் ஒன்று, கிருஷ்ணகிரி நோக்கி நேற்று மாலை சென்றது.
வேனை ஸ்ரீநாத், 23, என்பவர் ஓட்டி சென்றார். வேனில் பின்புறம் தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். மாலை, 5:30 மணியளவில், கொல்லப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த சென்னசந்திரத்தை சேர்ந்த பத்மா, 45, என்பவர் பலியானார்.
சென்னசந்திரம் சின்னதம்பி, 60, சென்னகிருஷ்ணன், 58, முருகன், 41, கன்னியம்மாள், 35, ஷாலி, 60, ஈஸ்வரி, 40, விஜயா, 47, மோரமடுகு தேவராஜ், 50, சீனிவாசன், 40, நாராயணன், 65, மாதேஷ், 45, சாஸ்திரி, 60 ஆகிய, 12 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கவிழ்ந்த வேனில் இருந்த மாங்காய்கள் சாலையில் சிதறி கிடந்தன.
வேனை அப்புறப்படுத்திய போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் சின்னதம்பி, தேவராஜ், சென்னகிருஷ்ணன் ஆகிய மூவரும் ஆபத்தான நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.