ADDED : மே 12, 2025 02:40 AM
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள குழிப்பட்டியை சேர்ந்தவர் ராஜாத்தி, 60. இவர் நேற்று முன்தினம், ஒகேனக்கல் அடுத்துள்ள ஆலம்பாடியில் உள்ள, தனது தங்கை ஈஸ்வரி வீட்-டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து நேற்று, தனது பேத்தி காவி-யாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்வதற்கு, ஆட்டோ மூலம் ஒகேனக்கலுக்கு வந்துள்ளார்.அப்போது எதிரே வந்த சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து, ஆட்டோ மீது மோதியதில் ராஜாத்தி தலையில் பலத்த காயம் ஏற்-பட்டது. காவியா, 9, ஆட்டோ டிரைவர் பிரபு, 38, உள்ளிட்ட
மூவரையும் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ராஜாத்தியை பரிசோதித்த டாக்டர்கள்
ஏற்கனவே அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஒகேனக்கல் போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.