தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கனமழை
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கனமழை
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கனமழை
ADDED : அக் 05, 2025 01:20 AM
தர்மபுரி, வடகிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டடுள்ள, 'சக்தி' புயலின் காரணமாக, தமிழகத்தில் உள்ள, 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், அதிகபட்சமாக ஒகேனக்கல்லில், 65.40 மி.மீ., மழை பதிவானது. பென்னாகரம், 48, அரூர், 26.20, மாரண்டஹள்ளி, 32, பாலக்கோடு, 37, தர்மபுரி, 40, பாப்பிரெட்டிப்பட்டி, 20, நல்லம்பள்ளி, 20, மொரப்பூர், 4 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம், 292.60 மி.மீ., மழையும், சராசரியாக, 32.50 மி.மீ., மழையும் பதிவானது.
* அரூர் மற்றும் அச்சல்வாடி, கீரைப்பட்டி, சின்னாங்குப்பம், ஈச்சம்பாடி, தாமலேரிப்பட்டி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:00 மணி வரை விட்டு விட்டு பரவலாக சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்
காடாக காட்சியளித்தது. கொளகம்பட்டி, கீழானுார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கியது. அரூரில் பெய்த மழையால் நான்குரோடு, திரு.வி.க., நகர், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையில், குளம் போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நேற்று பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி
யடைந்தனர்


