ADDED : ஜூன் 03, 2025 01:40 AM
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி யாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 3,000 கன அடியாக குறைந்தது.
தமிழக - கர்நாடகா காவிரிநீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவுக்கு ஏற்ப அண்மை காலமாக நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 3,000 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் குறைந்தளவே கொட்டுகிறது.